புகையிலை பயன்பாடு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: உலக புற்றுநோய் தினத்தையொட்டி புகையிலை பயன்பாடு, வேதி ஆலைக் கழிவுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:உலக புற்றுநோய் தினம் நேற்று(பிப்.4ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது.

புற்றுநோய் பாதிப்புக்கு மருத்துவம் அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அகற்றுவது ஆகும். பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இதுவே உயிர்களை காப்பதற்கான சிறந்தவழியாகும்.

Related Stories: