கக்கனின் பேத்தி பதிவுத்துறை ஏஜஜி கீதா மாரடைப்பால் மரணம்

சென்னை: கக்கனின் பேத்தி கீதா மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக, நேர்மையாக பணியாற்றியவர் கக்கன். இவரது அண்ணனின் பேத்தி கீதா. இவர் பதிவுத்துறையில் ஏஜஜியாக சேலத்தில் பணிபுரிந்து வந்தார்.  கொரோனா சமயத்தில் கணவர், மாமியார் இறந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது தந்தையும் இறந்தார்.

இந்தநிலையில், சென்னையில் இருந்து சேலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விடுமுறையில் சொந்த ஊரான மதுரை சென்று இருந்தார். மதுரையில் அவருக்கு  நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். சென்னை படப்பை அடுத்துள்ள ஒரகடம் பகுதியில் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: