குஜராத்தில் நில அதிர்வு

அகமதாபாத்: குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் நேற்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அம்ரேலி நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 43கி.மீ. தொலைவை மையமாக கொண்டு நிலஅதிர்வு உருவாகி இருந்தது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

Related Stories: