விலையை குறைக்க 15ம் தேதி கோதுமை ஏலம்

புதுடெல்லி: கோதுமை விலை அதிகரிப்பு காரணமாக சமீபத்தில் 30 லட்சம் டன் கோதுமையை உள்நாட்டிலேயே திறந்த வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதி இந்திய உணவு கழகம் சார்பில் மின்னணு மூலம் ஏலம் நடத்தப்பட்டு 9.2லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது.

வாரம் தோறும் புதன்கிழமைகளில் மின்னணு ஏலம் நடத்த திட்டமிட்டு இருந்தது. எனினும் இரண்டாவது மின்னணு ஏலம் வருகின்ற 15ம் தேதி நடைபெறும் என்று உணவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: