நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

புதுடெல்லி: நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 60 உறுப்பினர்கள் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்.27ல் தேர்தல் நடக்கிறது. அங்கு வேட்புமனு செய்ய பிப்.7ம் தேதி கடைசி நாள்.

இந்தநிலையில் 21 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதலுடன் வெளியான இந்த பட்டியலில் திம்மாபூர் 1 தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் கே. தெர்ரி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: