ஓபிஎஸ் அரசியல்வாதியா?..ஓஎஸ் மணியன் சந்தேகம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ பேட்டி அளித்தபோது, அதிமுக நான்கு அணிகளும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என பாஜ கருத்து கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, நகை கடைக்கு மோதிரம் வாங்க சென்றால் கடைக்காரர் செய்கூலி, சேதாரம் கூறுவார்.

அப்படி என்றால் மோதிரமே சேதம் அடைந்து விட்டது என்று பொருளா? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி உள்ளார். அரசியல்வாதியாக இருந்தால் நடப்பு தெரியும். உண்மை தெரியும். பெரும்பான்மை யாருக்கு என்று தெரியும் போது, விட்டுக் கொடுத்து இருக்கலாமே. நீதிமன்றம் செல்ல வேண்டியது இல்லையே என்று பதில் அளித்தார்.

Related Stories: