என் பேச்சு எடுபடாது ஈபிஎஸ் வேட்பாளர் விரக்தி: மாஜி அமைச்சர் டென்சன்

ஈரோட்டில்  நேற்று அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வேட்பாளர்  மேடை நிகழ்ச்சியில்அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேசும்போது, நீங்கள் கொடுத்துள்ள  கோரிக்கைகள் அனைத்தும் எடப்பாடி தலைமையில் 2026ல் ஆட்சிக்கு வந்தால்  நிறைவேற்றப்படும். தற்போது, நான் கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபையில் எது  பேசினாலும் நடக்காது என்றார்.

அவரது விரக்தியான பதிலை  கேட்டு அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் டென்சன் ஆனார். பின்னர், எழுந்து சென்று வேட்பாளரிடம் நீங்கள் இப்படி பேசினால்  கிடைக்கிற ஓட்டும் கிடைக்காமல் போய்விடும் என்று எச்சரித்தார். இதையடுத்து,  சுதாரித்துக்கொண்ட தென்னரசு   கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறி சமாளித்தார்.

Related Stories: