9ல் குரு வெற்றி உறுதி செங்கோட்டையன்: வேட்பாளர் யாருண்ணே தொண்டர்கள்

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் பேசியதாவது: எடப்பாடி முதல்வராக இருந்த போது ஈரோட்டில்  பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, சாலை வசதிகள்  மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலானது 27ம்  தேதி நடைபெற உள்ளது.  இதன் கூட்டு எண் தொகை 9 ஆகும். 9ல் குரு இருந்தால்  வெற்றி உறுதி என்று கூறுவார்கள்.

மேலும், வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி  நடக்கிறது. 2ம் எண்ணும் நமக்கு ராசியானது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில்  இருந்த தொண்டர்கள் “வேட்பாளர் யாரு, சின்னம் என்ன, போட்டி இருக்கா? இல்லையா? என  எதுவும் உறுதியாக தெரியாமலேயே அண்ணன் எப்படி உருட்டுகிறார்ன்னு பாருங்க”  என்றனர்.

Related Stories: