பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

புதுடெல்லி: பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி மூலம் இ கோர்ட் செயல்திறன் அதிகரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். நமது நாட்டில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட 73வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கலந்து கொண்டு ‘மாறும் உலகில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார். அதை தொடர்ந்து நமது நாட்டின் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: கொரோனா தொற்றுநோய் காலத்தில், உச்ச நீதிமன்றம் மக்களைச் சென்றடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் வீடியோ கான்பரன்சிங் முறையை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமீபத்திய பட்ஜெட்டில் ஒன்றிய அரசு இ-கோர்ட்டுகள் திட்டத்தின் 3 ம் கட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது இந்தியாவில் நீதித்துறை செயல்திறனையும் மேம்படுத்த உதவும். 2020 மார்ச் 23 முதல் முதல் 2022 அக்டோபர் 30 வரை  உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் 3.37 லட்சம் வழக்குகளை விசாரித்தது.  எங்கள் வீடியோ கான்பரன்சிங் உள்கட்டமைப்பை மெட்டா அளவில் புதுப்பித்துள்ளோம். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளில் சேர அனுமதிக்கும்  தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: