தொலைத்தொடர்பு சேவை விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: திமுக எம்பி வில்சன் கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்வியில், ‘‘சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா. நலிவடைந்த தொலைத்தொடர்பு சேவை முன்னுரிமைகளை புதுப்பிக்கவும், திருப்பிச் செலுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சகம் ஏதேனும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளதா, அப்படியென்றால் அதன் விவரங்கள் என்ன?’’ என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தகவல் தொடர்பு இணை அமைச்சர்  தேவுசின் சௌஹான்,” டெலிகாம் சேவை வழங்குநர்கள் சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்துமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். உரிமம் மற்றும் நிபந்தனை ஆகியவை உட்பட விதிமுறை மீறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைத்தவிர டெலிகாம் துறையில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் நடைமுறை சீர்திருத்தங்களுக்கும் செப்டம்பர் 2021ம் ஆண்டு ஒன்றிய அரசு தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

Related Stories: