ரஜினி, கமல் பட தயாரிப்பாளர் மயிலை குருபாதம் காலமானார்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.வி.குருபாதம் என்ற மயிலை குருபாதம் (75), பெங்களூருவில் நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். டி.ராஜேந்தர் இயக்கத்தில் ஸ்ரீநாத், ஜோதி நடித்த ‘ரயில் பயணங்களில்’, சிவகுமார் நடித்த ‘கற்பூர தீபம்’, ரஜினிகாந்த் நடித்த ‘லட்சத்தில் ஒருவன்’, சரத்குமார் நடித்த ‘இதுதாண்டா சட்டம்’, கமல்ஹாசன் நடித்த ‘இரு நிலவுகள்’, அர்ஜூன் நடித்த ‘என் சபதம்’ ஆகிய தமிழ்ப் படங்களையும், தெலுங்கில் என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, ஜெயப்பிரதா நடித்த சில படங்களையும் தயாரித்துள்ளார். மயிலை குருபாதத்துக்கு மனைவி ஆர்.வி.கமலா, மகள் ஆர்.வி.கோதா, மகன் ஆர்.வி.ரவி ஆகியோர் உள்ளனர். மயிலை குருபாதத்தின் உடல் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கே.ஆர்.செல்வராஜ்: ராதாரவி நடித்த ‘இளைஞர் அணி’ என்ற படத்தை இயக்கிய கே.ஆர்.செல்வராஜ் (60), நேற்று முன்தினம் மதியம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். டப்பிங் யூனியன் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளராக இருந்த அவர், சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் அஞ்சலி செலுத்தினார். நேற்று கே.ஆர்.செல்வராஜின் இறுதிச்சடங்கு நடந்தது.

Related Stories: