இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு மாணவர் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னையில் தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, ‘கையோடு கைகோர்ப்போம்’ என்கிற மாபெரும் பரப்புரை இயக்கத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.

அகில இந்திய மாணவர் காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் நாகேஷ் கரியப்பா முன்னிலையில், மாணவர் காங்கிரசின் வாகன பேரணி சத்தியமூர்த்தி பவனில் இருந்து, அதன் தலைவர் சின்னதம்பி தலைமையில் புறப்பட்டது.

 

இப்பேரணியை, கட்சியின் மாநில துணைத்  தலைவர்கள் கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி, காமராஜர் நினைவு இல்லம் வரை சென்றது. அங்கு, பாஜ அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், ஓ.பி.சி.துறை தலைவர் டி.ஏ.நவீன், மாநில செயலாளர் வடசென்னை ரஞ்சித் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: