பாஜவை பார்த்து பயம் கிடையாது மரியாதைதான் புகழேந்தி கருத்து

நாகர்கோவில்: அதிமுக ஓபிஎஸ் அணி ஆதரவாளரான புகழேந்தி நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கிறோம். உச்சநீதிமன்றம் கூறி உள்ள உத்தரவு, இடைத்தேர்தலில் சின்னத்தை ெபறுவதற்கான உத்தரவு மட்டுமே. சசிகலாவுக்கு எடப்பாடி துரோகம் செய்துள்ளார். இது அனைவருக்கும் தெரியும். பாஜ மீது எங்களுக்கு மரியாதை உண்டு. பயம் எதுவும் கிடையாது. பாஜவை கண்டு பயப்பட வேண்டிய நிலை, ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்றார்.

Related Stories: