தமிழக போலீசில் நவீன டிரோன் காவல் நிலையம்: கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைகிறது

சென்னை: தமிழக காவல் துறையில், புதியதாக கன்ட்ரோல் ரூம், இயக்கம் கண்காணிப்பு, சர்வர் அறை என அனைத்து வசதிகள் கொண்ட டிரோன் காவல் நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில், குற்ற செயல்களை கண்டுபிடிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழக காவல் துறை முன் மாதிரியாக உள்ளது. சவலான பல வழக்குகளை தமிழக காவல் துறை நவீன வசதிகள், வித்தியாசமான முறையை கையாண்டு துப்பு துலக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருகிறது. தமிழக காவல் துறையில் சைபர் கிரைம், ரோந்து பிரிவு போக்குவரத்து காவல் பிரிவு என பல பிரிவுகள் உள்ளது. இந்நிலையில் தமிழக காவல் துறையின் கண்காணிப்பு பிரிவில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் டிரோன் காவல் நிலையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி தெரிவிக்கையில்: பண்டிகை நாட்கள், போராட்டம், என வரும் நாட்களில் டிரோன் கேமராக்களை பறக்க விட்டு போலீசார் கண்காணிப்பர். இனிமேல் டிரான்களை குற்றங்களை தடுக்கவும் பயன்படுத்த தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக,சென்னை அடையாறில் டிரோன் காவல் நிலையம் தொடங்கப்படவுள்ளது, இதற்காக 2 கி.மீ., தூரம்  வரை கண்காணிக்கும் க்யூக் ரெஸ்பான்ஸ் டிரோன் மற்றும் 1 கி.மீ., தூரம் வரை கண்காணிக்கும் மற்றும் பொருட்களை எடுத்து செல்லும் ஹெவி லிஃப்டிங்க் டிரோன்  மற்றும் 6 கி.மீ., தூரம் வரை கண்காணிக்கும் லாங் ரேஞ்ச் என 3 டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது.

தற்போது அடையாறு காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த டிரோன்களை கொண்டும், காவல் நிலைய பிரிவில் உதவி ஆய்வாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டு டிரோன் காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு குற்றவாளிகள் கண்காணிப்பு, பிரச்னைக்குரிய பகுதிகள் கண்காணிப்பு, கன்ட்ரோ ரூம், தகவல் சேமிக்கும் சர்வர் அறை, குற்றவாளிகள், குற்றங்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிகளுக்கு விரைவாக டிரோன்களை அனுப்பி, தடுப்பது அல்லது குற்றவாளிகளை பிடிப்பது போன்ற பணியில் ேபாலீசாருக்கு உதவும்.

அடையாறு காவல் நிலையத்திற்குட்ட பகுதியில் எந்த நேரமும் இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் கண்காணித்து கொண்டே இருக்கும்.அதோடு டிரோன்களை இயக்க ஏதுவாக நிரந்தரமாக கன்டெய்னர்கள் நிறுத்திவைக்கப்பட்டு அந்த கன்டெய்னருக்குள் நிரந்தர கட்டுப்பாடு மையமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிரோன் கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். குற்ற செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்கும் இந்த டிரோன் ஏதேனும் அசாம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும். குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றால் இந்த டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க உதவும்.

Related Stories: