மனித உரிமை மீறல் புகாரில் 4 போலீஸ் அதிகாரிகளின் அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மனித உரிமை மீறல் புகாரில், நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவை, ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர், அப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரின் தூண்டுதலின் பேரில் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததுடன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததாகவும் கூறி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், நந்தகுமாருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து டி.எஸ்.பி. ராஜாகுமார், ஆய்வாளர்கள் சுகவனம், ராம்பிரபு மற்றும் எட்வர்ட் ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த நந்தகுமார் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பணம் பறிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் நான்கு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில்  இரு வழக்குகளில் அவர்  கைதும் செய்யப்பட்டுள்ளார் என்பது ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

அரசுக்கு ஏற்பட இருந்த வருவய் இழப்பை தடுத்ததற்காகவோ, குற்ற வழக்கில் சம்பத்தப்பட்டிருந்தாலோ ஒருவரை ஹீரோ என்றோ, வில்லன் என்றோ சொல்ல முடியாது.

காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பாதது நடைமுறை குறைபாடு தானே தவிர, மனித உரிமை மீறல் அல்ல. இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: