மிஸ் இந்தியா அழகி போட்டிக்குத் தயாராகும் திருநங்கை: மனம் தளராமல் சுயதொழில் செய்து குடும்பத்திற்கு உதவி

நாகை: ஏழ்மை நிலையிலும் பல்வேறு போட்டிகளில் வென்ற நாகையை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருநங்கைகளுக்கான மிஸ் இந்தியா போட்டிக்கு தயாராகி வருகிறார். நாகையை அடுத்துள்ள வடக்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்த திருநங்கையான ரபியா சமூக ஒதுக்கு முறையால் மனம் தளர்ந்து விடாமல் பெங்களூருவில் அழகு கலை படிப்பை முடித்து சுயதொழில் செய்து சம்பாதித்து குடும்பத்திற்கும் உதவியாக இருக்கிறார். தமிழ் நாட்டு அளவில் நடைபெற்ற பல்வேறு திருநங்கைகளுக்கான அழகி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ரபியா தற்போது மிஸ் இந்தியா போட்டிக்கு தயாராகி வருகிறார். ஆனால் பொருளாதாரம் அவருக்கு தடையாக இருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வேலை செய்து கொண்டே ரபியா பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது மிஸ் இந்தியா திருநங்கை போட்டிகளுக்கான அழகி போட்டியில் பங்கேற்க இருக்கிறார். மும்பை சென்று பயிற்சியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக ரூ.25,000, சிகை அலங்காரம், ஆடைகள், காலனி என இரண்டு லட்சம் வரை செலவாகும் என்பதால் நல்மனம் கொண்டவர்களின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார். சமூகத்தில் நிரந்தரமான அங்கீகாரத்தை பெறுவதற்கான போராட்டத்தில் ஒரு சில திருநங்கை மட்டுமே சாதிக்கமுடிகிறது. அவர்களில் ரபியாவும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories: