மறைந்த பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்..!

சென்னை: மறைந்த பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று (04-02-2023) காலத்தால் அழியாத பல திரைப்படப் பாடல்களை பாடிய பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன். திருமதி வாணி ஜெயராம் அவர்கள் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய பல மொழிகளில் 10,000-க்கு மேற்பட்ட பாடல்களை பாடி தனி முத்திரை பதித்தவராவர். இந்த ஆண்டு, ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம பூசண் விருது திருமதி வாணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, கௌரவபடுத்தப்பட்டது.

ஜெயராம் இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அவரின் ரசிகர்களால் அழைக்கப்படுபவராவார். இவர் அபூர்வராகங்கள், சங்கராபரணம், சுவாதி கிரணம் ஆகிய 3 படங்களுக்கு பாடி தேசிய விருது பெற்றுள்ளார். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: