×

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு

உஜ்ஜைன்: மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள Jhitar Khedi கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சிலர் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் காவல்துறையினர் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தாக்குதலுக்கு பயந்து காவல்துறையினர் பின்வாங்கிய நிலையில் விடாப்பிடியாக அப்பகுதியை சேர்ந்த சிலர் காவலர்கள் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 காவலர்கள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும், காவல்துறையின் வாகனம் ஒன்று சேதமடைந்ததாகவும், உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Madhya Pradesh , Stone pelting attack on policemen who went to clear the encroachment: agitation in Madhya Pradesh
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி