நிச்சயமாகி 8 மாதங்களாகியும் திருமணம் நடக்காததால் இளம்பெண் தற்கொலை

புழல்: செங்குன்றம் அருகே நிச்சயமாகி 8 மாதங்களாகியும் திருமணம் நடைபெறாத வேதனையில் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் கனகப்பிரியா (23). இவர், செங்குன்றத்தில் ஒரு தனியார் வங்கி ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே கனகபிரியாவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு இருதரப்பிலும் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் கனகபிரியா கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனக்கு திருமணம் எப்போது என தந்தையிடம் கனகபிரியா கேட்டதற்கு இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கனகபிரியா அறைக்குள் சென்று கதவை பூட்டி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கனகபிரியாவின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகபிரியாவின் தற்கொலைக்கான பல்வேறு காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: