நாமக்கல் தோட்டக்கலை அலுவலகத்தில் தீ விபத்து: 15 கம்யூட்டர்கள், பதிவேடுகள் எரிந்து நாசம்

நாமக்கல்: நாமக்கல் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், 15 கம்ப்யூட்டர்கள், பதிவேடுகள் எரிந்து நாசமானது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேசன் அருகில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை 6 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து 15 கம்ப்யூட்டர்கள், 2 லேப்டாப் மற்றும் பதிவேடுகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தன்பதிவேடுகள் எரிந்து நாசமானது.

தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்லிபாளையம் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீவிபத்து பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட்டார். அதிகாலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அரசு அலுவலகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: