ஒரத்தி ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி திரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1ம் தேதி முதல் கும்பாபிஷேக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க 3 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

நேற்று காலை கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசங்கள் மீது புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் லேசான மழை பெய்தது. இருப்பினும் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் ஒருவர்கூட நகராமல் கும்பாபிஷேகத்தை கண்டு களித்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Related Stories: