7000கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள்: அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வரும் நிதியாண்டில் 7000கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ ரயில்வே பயணிகளின் முன்பதிவு இறுதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். தற்போது நிமிடத்துக்கு 25ஆயிரம் டிக்கெட் வழங்கும் திறன் உள்ளது.

இது நிமிடத்துக்கு 2.25லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விசாரணைகளில் பங்கேற்கும் திறன் நிமிடத்துக்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2000 ரயில் நிலையங்களில் ஜன் சுவைதா கடைகள் திறக்கப்படும். இவை 24மணி நேரமும் திறந்து இருக்கும். 2023-2024ம் நிதியாண்டில் புதிதாக 7000கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்” என்றார்.

Related Stories: