வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: ``வரும் தேர்தல்களில் நாடு முழுவதும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டமில்லை,’’ என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

 ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதில்: தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு தொகுதிகளில் இருந்தபடி வாக்களிக்க கூடிய ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் மாநிலம் அல்லது மாவட்டத்தில் இருந்து சொந்த ஊரில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. இருப்பினும், வரவிருக்கும் தேர்தல்களில் நாடு முழுவதும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் கிடையாது. அதே போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகவும் அதனை பயன்படுத்த போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: