ராகுல் யாத்திரைக்கு வராமல் வீட்டில் இருந்தபடி கருத்து கூறுவோருக்கு காங். குட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு வராமல் வீட்டில் இருந்தபடி கருத்து கூறி விமர்சிக்கும் சமூக ஊடக போராளிகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இந்த பயணம் 140 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 4,000 கி.மீ. தூரத்தை கடந்து கடந்த 30ம் தேதி காஷ்மீரில் முடிந்தது.  

இந்நிலையில், யாத்திரையில் பங்கேற்காமல் வீட்டில் இருந்தபடி கருத்து கூறுவோருக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளரும் ஊடகப் பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் 4 நிமிடங்கள் ஓடக் கூடிய அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ``போராட்ட களமான இந்த யாத்திரையில் பங்கேற்காமல் வீட்டில் இருந்தபடி சமூக வலைதளங்களில் மட்டும் கருத்து தெரிவித்து போராடும் காங்கிரசார், அவர்களின் அத்தகைய விமர்சனங்கள் மூலம் தங்களை தலைவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்,’ என்று  கூறியுள்ளார்.

Related Stories: