பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள கக்காரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம் போல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 2.30மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் ஒன்று பறந்து வந்தது. இதனை கண்டு உஷாரான வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த டிரோனின் பாகங்கள் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 3 கிலோ எடை கொண்ட ஹெராயின் பாக்கெட்டும் கைப்பற்றப்பட்டது.

Related Stories: