‘தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்’ சென்னையில் நாளை புதுக்கட்சி தொடங்குகிறார் பழ.கருப்பையா

சென்னை: பழ.கருப்பையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்எனும் புதிய கட்சியை தொடங்குகிறேன். நேர்மை, எளிமை, செம்மை, அறம் சார்ந்த அரசியலே இதன் முதல் கொள்கை. நாங்கள் சில ஆயிரம் நபர்கள் இணைந்து இதை தொடங்க இருக்கிறோம். நாளை ஞாயிற்றுக்கிழமையன்று ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் எமது கழகத்தின் மாநாடு நடக்க இருக்கிறது. தொண்டர்களுக்கு மட்டுமே உரிய மாநாடு. இக் கட்சியில் சேர இருக்கின்றவர்களுக்காக இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: