பட்டாக்கத்தியுடன் பைக்கில் வந்த ரவுடிகளை விரட்டி பிடித்த காவலருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: வாகன சோதனையின் போது, பைக்கில் பட்டாக்கத்தியுடன் வந்த 2 ரவுடிகளை விரட்டி பிடித்த காவலரை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது, அதில் வந்த 2 பேர், காவலர்களை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றனர்.

உடனே, காவலர் மோகன்ராஜ் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். பிறகு பிடிபட்ட 2 பேரை சோதனை செய்த போது, அவர்களிடம் பட்டாக்கத்தி இருந்தது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்து, பிடிபட்ட இருரையும் கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் பிரபல ரவுடிகளான கார்த்திக் (எ) அவதார் கார்த்திக் என்றும், சதீஷ் (எ) தீஞ்ச சதிஷ் என்றும் தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். குற்றம் செய்ய சென்ற போது, குற்றவாளிகளை துணிச்சலுடன் மடக்கி பிடித்த காவலர் மோகன் ராஜை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories: