சென்னைக்கு கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 12 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 160 கிலோ கஞ்சா கடத்திய வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவில் இருந்து இருவர் 160 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் அந்த வாகனத்தில் 8 மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரங்கநாதன், வேலூரைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதை பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1.70 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: