உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் தலைமை செயலகத்தில் இன்று நடைப்பெற்றது.

சென்னை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், அவர்கள் தலைமையில் மாபெரும் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்  தலைமை செயலகத்தில் இன்று  நடைப்பெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார் தலைமையில் மாபெரும் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்  தலைமை செயலகத்தில் இன்று (03.02.2023)  நடைப்பெற்றது.

இந்த புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாமை தலைமைச் செயலகத்தில் இந்திய மருத்துவ சங்கம், தலைமைச் செயலக ஊழியர் சங்கம், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய பெருங்குடல் மற்றும் மலச்சிக்கல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், பிரைம் இந்தியன் மருத்துவமனை, சென்னை மற்றும் கீரீஸ்வரி மருத்துவமனை, சென்னை இணைந்து நடத்தினர். இந்த முகாமில், வயிற்றில் கட்டிகள் உள்ளதா என்பதை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும், மார்பக பற்றுநோயை கண்டறியும் பரிசோதனையும், கல்லீரல் கட்டியை கண்டறியும் அல்ட்ராசவுண்ட் மற்றும் பைப்ரோஸ்கேன் பரிசோதனையும், கர்பப்பை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையும் மற்றும் கால்சியம் அளவு கண்டறியும் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும், இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து சிகிச்சையை பெற மருத்துவமனைக்கு இலவச டோக்கன் அளித்து பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக புற்று நோய் தினத்தின் தாரக மந்திரம். அனைவருக்கும் புற்று நோய் சிறப்பு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். என்பதே ஆகும். இந்த மருத்துவ முகாமை அரும்பாக்கம், பிரைம் இந்தியன் மருத்துவமனை சேர்மன் டாக்டர்.ஆர்.கண்ணன் மற்றும் இயக்குநர் டாக்டர்.ஆர்.கோதண்டராமன் தலைமையில் 10 மருத்துவர்கள் மற்றும் கீரீஸ்வரி மருத்துவமனை சார்பிலும் 6 மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தில் இருந்து 5 மருத்துவர்கள் இணைந்து நடத்தினர். தலைமை செயலக அதிகாரிகளும், அலுவலர்களும் சுமார் 500 பேர் முகாமில் பரிசோதனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களும், தொடர் சிகிச்சை குறித்தும் விளக்கங்களை பெற்று சென்றனர்

Related Stories: