தெற்கு ரயில்வேவில் 10 மாதத்தில் 52.861 கோடி பேர் பயணம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை 10 மாதங்களில் 52.86 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 10 மாதங்களில் 96.2% வருமானம் அதிகரித்து ரூ.5,247 கோடி பெறப்பட்டுள்ளது. 5.087 கி.மீ. ரயில் பாதையில் 4,393 கி.மீ மின்சார பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தென்னக இரயில்வே என்பது இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். ஏப்ரல் 14, 1951 அன்று தென் இந்திய ரயில்வே கம்பெனி, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் மாநில இரயில்வே ஆகியவற்றையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது.

பயணியர் வசதி ரயில் போக்கு வரத்து மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் தெற்கு ரயில்வேயின் வருவாய் அதிகரித்து வருகிறது. 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை 10 மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முன்பதிவு செய்த பயணிகள், முன்பதிவு இல்லாத பயணிகள், பயணிகள் ரெயில் மற்றும் பண்டிகைக் கால சிறப்பு ரெயில்கள் மின்சார ரெயில்கள் ஆகியவற்றின் மூலம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 10 மாதங்களில் 96.2% வருமானம் அதிகரித்து ரூ.5,247 கோடி பெறப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: