தா.பழூர் பகுதியில் மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பொன்னாற்று பாசனம் மூலம் சுமார் 5 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி நடவு செய்திருந்தனர். இதில் பொன்னாற்று பாசனம் மூலம் குடிகாடு, தென்கச்சி பெருமாள் நத்தம், அடிக்காமலை, கூத்தங்குடி, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, அண்ணங்காரன்பேட்டை, குறிச்சி, கோடாலி கருப்பூர், அருள்மொழி கோவிந்தபுத்தூர், ஸ்ரீ புரந்தான், முத்துவாஞ்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொன்னாற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்று விவசாயிகள் சம்பா பருவ நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மேட்டூர் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஜூன் மாதத்திற்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றின் மூலம் தண்ணீர் திருச்சி கல்லணைக்கு வந்தது. அங்கிருந்து வீராணம் மற்றும் பொன்னாறு, மற்றும் கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தடைந்தது.

மேலும் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் நெல் விதைப்பில் தாமதம் காட்டி வந்தனர். பின்னர் வெயில் வாட்டி வந்ததால் நெல் விதைப்பிற்கு போதுமான தட்பவெப்ப சூழ்நிலை உள்ள காரணத்தினால், சம்பா நெல் சாகுபடி விதை நெல் விதைப்பில் ஈடுபட்டனர். நாற்றங்கால் தயார் செய்து 1009 மற்றும் சன்னம் உள்ளிட்ட நெல் ரகத்தை தேர்வு செய்து விதை நெல் நாற்றங்கால் தயார் செய்தனர்.

நெல் நாற்றங்கால் 15லிருந்து 20 நாட்களில் நடவு செய்வதற்கு தயாரான நிலையில் நடவு பணி மேற்கொண்டனர். இதற்கு உரம் வைத்து களை எடுத்து பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளித்து காலத்திற்கு ஏற்ப தண்ணீர் விட்டு நெல் மணிகளை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் தற்போது சம்பா நெல் கதிர்கள் முற்றிய நிலையில் விவசாயிகள் சம்பா அறுவடையை துவங்கி உள்ளனர். தா.பழூர் சுற்றி உள்ள தாதம்பேட்டை, அடிக்காமலை, குடிகாடு, தென்கச்சி பெருமாள் நத்தம், இடங்கண்ணி, கூத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயந்திரம் மூலம் சம்பா நெல் அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் நெல் மணிகள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். முதலில் நடப்பட்ட நடவு பயிர்கள் நன்கு விளைந்த நிலையில்ஸ கதிர்கள் முற்றி தரையில் சாய துவங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் தரையில் படுத்தும் உள்ளது. இதனால் தற்போது பொழியும் மழையால் தரையில் சாய்ந்து உள்ள கதிர்கள் முளைத்து விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் எதிர்பார்க்காத இந்த மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Stories: