ஈபிஎஸ், ஓபிஎஸ் உடனான அண்ணாமலை சந்திப்பு நிறைவு: இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட பாஜக வலியுறுத்தல்

சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ் உடனான சந்திப்பு நிறைவு பெற்றது. டெல்லி சென்று வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்தித்து பேசினார். முன்னதாக ஈபிஎஸ்ஸை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்பு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்று முடிவு தெரிந்துவிடும் என பாஜக தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளது. பாஜக கட்சி அலுவலகமான கமலாலயத்தில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். கமலாலய ஆலோசனைக்கு முன், தனியார் ஓட்டலில் அண்ணாமலை, சி.டி.ரவி முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related Stories: