'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம்': பாஜகவை பற்றி எங்களுக்கும்; மக்களுக்கும் தெரியும்.. ஓபிஎஸ் தரப்பு பொன்னையன் பேட்டி..!!

சென்னை: பாஜக விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில் பாஜகவுக்கு எதிராக பழனிசாமி தரப்பில் செய்தியாளர்களுக்கு பொன்னையன் அளித்த பேட்டியில், வட மாநிலங்களில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிந்துள்ளோம். பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும்.  நட்பு கட்சிகளின் ஆட்சியை பாஜக எப்படி எதிர்த்தது என்பது எங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் என கூறினார். கூட்டணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு, உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜவுடனான கூட்டணி முடிந்து விட்டது; பாஜக தனித்து தான் போட்டியிட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கே பொருளிலை. இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என பொன்னையன் தெரிவித்தார். மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் பாஜகவும் எங்களை விரும்பலாம் அல்லவா? என கேள்வி எழுப்பிய அவர், பாஜக விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய பொன்னையன், சட்டவிதிகளை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை கை காட்டுவதை ஏற்க முடியாது. 94.5 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதால் இரட்டை இலை பழனிசாமிக்கு கிடைக்கும் எனவும் கூறினார்.

Related Stories: