ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கு கான கணினி வழி தேர்வு தமிழ்நாடு முழுவதும் 188 மையங்களில் நடைபெறுகிறது

சேலம்: ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கு கான கணினி வழி தேர்வு தமிழ்நாடு முழுவதும் 188 மையங்களில் இன்று முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2, முதல் கட்ட தேர்வு இன்று முதல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டம் கட்ட தேர்வு 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகப்பச்சமாக சேலத்தில் 14 மையங்கள், திருச்சி, கன்னியாகுமரியில் தல 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4,01,886 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 4,01,856 தகுதிபெற்றுள்ளனர்.

தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க மேற்பார்வையாளர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வின் போது நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து சி. சி. டி. வி மூலம் இணை இயக்குனர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.      

Related Stories: