புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் சட்டமன்றத்திற்கு வருகை.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டமானது இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியுள்ளது, கூட்டம் தொடங்கியவுடன் ராணி எலிசபத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் பேரவைக்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற எதிர் கட்சி சுபாஷ் தலைமையில் அரசு பள்ளி மாணவர் சீருடை, மற்றும் சைக்கிளில் வந்தார்கள்.

அப்பொழுது இது குறித்து அவர்களிடம் கெட்டபொழுது, அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை என கூறியும் மேலும் இலவச சைக்கிள் இதுவரை வழங்க படவில்லை என கூறியும் அவரகள் சட்டப்பேரவைக்குள்ள வந்தார்கள். பேரவை தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது, அக்கட்சியின்னுடைய நிறுவனரும் முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி வருகின்றார்கள். இதுவரை ஒன்றிய அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் தெரிவிக்கவில்லை ஆகவே இந்த பேரவையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவரகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த ஆட்சியை யார் நடத்துகின்றார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள், அது குறித்து அமைச்சர் பதிலளிக்கவில்லை மேலும் சபாநாயகர் இறுதியாக உங்களுக்கு பதியளிக்கப்படும் என்று தெரிவித்தார். இருந்த போதிலும் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர் அதாவது ஒன்றரையாண்டு ஆகியும் அரசு அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை அரசு நிறைவேற்றப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் அவர்கள் பேசக்கூடிய மைக் அணைக்கப்பட்டது என்று அவர்கள் குறியுள்ளனர். இதையடுத்து திமுக அணியினர் அனைவரும் அவையை விட்டு வெளியேறிவிட்டார்கள். தொடர்ந்து பேரவை நடந்துகொண்டு இருக்கிறது, அதாவது செலவினங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு ஆகியவை மட்டும்தான் பேரவையில் அனுமதிக்கப்படுகின்றன.

ஏனென்றால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பேரவை கூட்டப்பட்ட வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றது, அந்தவகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பேரவை கூடியது, ஆகவே அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இன்னும் சிலமணி நேரங்களில் இந்த கூட்டத்தொடரானது முடிவதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இதில் ஏதேனும் அறிவுப்பு வெளியிடப்பட இருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.       

Related Stories: