ரயில்வேக்கு சிவில் சர்வீஸ் மூலமாக ஆட்கள் சேர்ப்பு

புதுடெல்லி: இந்த ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக இந்திய ரயில்வே மேலாண்மை பணிகளுக்கான அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமாக இந்திய ரயில்வே நிர்வாக பணிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய ரயில்வே மேலாண்மை பணிகளுக்கான தேர்வானது கைவிடப்படுகின்றது. 2023ம் ஆண்டு யுபிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் பிரத்யேக ஐஆர்எம்எஸ் தேர்வின் மூலம் ஆட்கள் சேர்க்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்த உத்தரவிற்கு இது முரணான அறிவிப்பாகும்.

Related Stories: