போதைப்பொருள் விற்ற பெண் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள பெட்டி கடையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் ரோகித்நாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது.  அவரது உத்தரவின்பேரில், உதவி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார், அந்த கடையை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம், கூட்டமாக அந்த கடைக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி,  கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், இவற்றை விற்பனை செய்த அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த கனகாதேவியை (45), கைது செய்து, அவரது பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

Related Stories: