கள ஆய்வில் முதல்வர் நிகழ்ச்சி முடிந்து ரயிலில் சென்னை திரும்பினார் முதல்வர்

சென்னை:  ‘கள ஆய்வில் முதல்வர்’ நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவு தயாரிக்கும் மையம், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுசெய்தார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோனை செய்தார்.  இதில், வேலூர்,  ராணிப்ேபட்டை, திருப்பத்தூர் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட பலர் பங்கேற்றனர். இதற்காக வேலூருக்கு 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரயில் மூலம் காட்பாடிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு 7.10 மணியளவில் தன்பாத் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

பின்னர், காட்பாடி ரயில் நிலையத்தில் தன்பாத் ரயிலில் நேற்றிரவு 7.10 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ரயில் முகுந்தராயபுரம் கடந்த நிலையில் 7.20 மணியளவில் திடீரென ரயிலில் ஒரு பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை யாரோ பிடித்து இழுத்தனர். இதனால் அங்ேகயே ரயில் நின்றது.  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உடனடியாக ஆய்வு செய்தனர். அப்போது, அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜார்ஸ் மதியா தேவி என்ற பெண் என்பது தெரியவந்தது. தவறாக கை பட்டுவிட்டதாக தெரிவித்த அவருக்கு ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 5 நிமிடம் கழித்து ரயில் மீண்டும்  அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: