அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிலிம்சேம்பர் நிர்வாகிகள் வாழ்த்து

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி தலைமையில் பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர்கள் அருள்பதி, கிருஷ்ணா ரெட்டி, துணை தலைவர் ராமகிருஷ்ணன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், சேம்பர் பில்டிங் கமிட்டி சேர்மனுமான கல்யாணம் ஆகியோர் நேரில் சந்தித்து, அவர் அமைச்சராகப் பதவி ஏற்றதற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிலிம்சேம்பர் வளாகத்தில் 2வது பிளாக் கட்ட அனுமதி வாங்கிக் கொடுத்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.  அடுத்து கட்ட இருக்கும் 3வது பிளாக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 10 ஆயிரம் சதுர அடி இடம் வழங்குவதையும் உறுதிப்படுத்தி அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

Related Stories: