ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 13 ஆடுகள் பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், விவசாயி. இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல தனது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்து விட்டார்.

இன்று காலை மீண்டும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல பட்டிக்கு பார்த்திபன் சென்றபோது, அங்கு மர்ம விலங்குகள் கடித்து 13 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 5 ஆடுகள் பலமாக கடிபட்டு இறக்கும் தருவாயில் இருந்தது. இதனால் அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: