ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான அம்பிளிக்கை, கேதையுறம்பு, இடையகோட்டை, மற்றும் மலைப்பகுதிகளான பால்கடை, வண்டிப்பாதை, கண்ணணூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் நடவு செய்துள்ளனர்.