வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மயானபூமி இயங்காது: சென்னை மாநகராட்சி

சென்னை: அண்ணாநகர்  மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், பொதுமக்கள் வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் எரிவாயு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் தற்போது உடல்களை எரியூட்ட செயல்பட்டு வந்த Bio Gasifier அமைப்பை, LPG அமைப்பாக மாற்றவும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளவும் 20.12.2022 முதல் 03.02.2023 வரை 45 நாட்களுக்கு தற்காலிகமாக மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேற்கண்ட மயானபூமியானது 04.02.2023 முதல் 19.02.2023 வரை மேலும் 15 நாட்களுக்கு இயங்காது. எனவே, பராமரிப்பு நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் எரிவாயு மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: