மின் இணைப்புடன், 2.49 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று வரை 2.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.  தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2.67 கோடி மின் இணைப்புகளில் 2.49 கோடி பேர் இணைத்துள்ளனர். இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியதாவது:

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று (பிப்.1ம் தேதி) மட்டும் 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் & 2,811 சிறப்பு நடமாடும் முகாம்களின் மூலம் 2.18 லட்சம் பேர் இணைத்துள்ளனர். 39 ஆயிரம் இணைப்புகள் ஆன்லைனில் மூலம் இணைக்கப்பட்டது. நேற்று வரை மொத்தம் 2.49 கோடி பேர் இணைத்துள்ளனர்.

Related Stories: