ஆந்திராவில் மீனவர்கள் வலையில் 9 அடி நீளமுள்ள ஆளில்லா விமானம் சிக்கியது..!!

ஆந்திரா: ஆந்திரா கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு 9அடி நீளமுள்ள ஆளில்லா விமானம் சிக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டதில் உள்ள சந்தமும்பலே என்ற  கடற்கரை அருகே மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க சில கிலோ மீட்டர் சென்ற நிலையில் 9 அடி நீளம் மற்றும் 111 கிலோ எடை கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று கண்டறியப்பட்டது. பேராசூட் மூலமாக இந்த ஆளில்லா விமானம் வந்து கடலில் விழுந்திருப்பதாக தெரியவந்ததை அடுத்து அதனை மீனவர்கள் பத்திரமாக கொண்டுவந்து கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 இதை குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது குறித்து போலீசார் கூறுகையில் இந்த ஆளில்லா விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறதாகவும், இந்த ஆளில்லா விமானத்தை யார் பயன்படுத்தினார்கள், எதற்காக பயன்படுத்தபட்டது என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவை ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்த கூடியதாகவும் ஆளில்லா விமானம் என்பதும் தெரியவந்துள்ளது.இது போன்ற விமானம் இந்திய கடற்படை மூலமாகவும் பயன்படுத்த பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடற்படை அதிகாரிகளுக்கும் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு இதே போன்று ஒரிசா மாநிலத்திலும் இதே போன்ற ஆளில்லா விமானம் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து அப்போது விமானப்படை அதிகாரிகள் கூறுகையில் விமானப்படை சார்பில் ஏவுகணைகளை தாக்குவதற்கு முன்பாக முன்மாதிரியாக ரேடாரை கொண்டு இந்த  ட்ரோன் முலமாக சோதனை நடைபெறுவதாகவும் அதற்காக பயன்படுத்த கூடிய இந்த ஆளில்லா விமானம் பயன்படுத்தபட்ட பிறகு மீண்டும் தேவைப்படாது என்று அப்போது தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: