வெங்கத்தூர் கண்டிகை கிராமத்தில்; கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி வெங்கத்தூர் கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 160 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதியில்லாததால் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து  பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டவேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலகோகி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அமைக்க பூமி பூஜை   நடைபெற்றது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இ.தினேஷ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் நா.வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.மோகனசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் எம்.பி.மோகன், ஜே.ரமேஷ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் இசக்கியம்மாள் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்றத் தலைவர் சுனிதா பாலயோகி கலந்துகொண்டு முதல் செங்கல்லை எடுத்துக்கொடுத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஊராட்சி ஒன்றிய பணிதள மேற்பார்வையாளர் பிரியா, ஒப்பந்ததாரர் ராமகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் தாடி நந்தா, சி.ஆர்.குமரன், கோவிந்தம்மாள் பழனி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: