தை பவுர்ணமியை முன்னிட்டு: சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

மதுரை: தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், தை பவுர்ணமியை முன்னிட்டு நாளை (பிப். 3) முதல் பிப். 6ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த 4 நாட்களும் காலை 7 முதல் பகல் 12 மணி வரை மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை தைமாத பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Related Stories: