உதகை பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாத்திடுக: மாவட்ட நிர்வாகத்துக்கு இருளர் இன மக்கள் கோரிக்கை

நீலகிரி: உதகை அருகே வசிக்கும் இருளர் இன மக்களின் கலாச்சாரம், வாழ்வுரிமைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரியில் உள்ள ஆணைக்கட்டி, சொக்கநல்லி, சிரியூர், வாணி தோட்டம், மாயார், செம்மநத்தம், பொக்காபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமங்கள் முதுமலை புலிகள் காப்பகம் அருகே இருப்பதால் அவர்களின் வாழ்வுரிமைகளை தடுக்கும் செயல்களில் வனத்துறை ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆணை கட்டியில் ஊர் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 7 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தெடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க முடிவு செய்துள்ள பழங்குடியினர் தீர்வு கிடைக்காவிட்டால் பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.   

Related Stories: