சளி, இருமல் குணமாகும் என நம்பிக்கை; குமரியில் கழுதை பால் விற்பனை அமோகம்

நாகர்கோவில்: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழையும் பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கழுதை பால் குடித்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரும்.

சளி உள்ளிட்ட பிரச்னைகள் வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியில் இருந்து கழுதை வளர்ப்பவர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு சங்கின் விலை ரூ100 ஆகும். பூதப்பாண்டி, அருமநல்லூர், எட்டாமடை உள்ளிட்ட பகுதிகளிலும், மார்த்தாண்டம் பகுதிகளிலும் கழுதைகளை அழைத்துச் சென்று அந்தந்த பகுதிகளில் தங்கி கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.

Related Stories: