விமான நிலைய வளாகத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம்: நாட்டிலேயே முதல்முறை சென்னை விமான நிலையதில் திறப்பு

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்துடன் இணைந்த மல்டிபிளெக்ஸ் திரையரங்கம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் இணைப்பு விமானத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் போதெல்லாம் அங்கு ஒரு திரையரங்கோ, வணிக வளாகமோ இருந்தால் நன்றாக இருக்கும் என பயணிகள் யோசிப்பது இயல்பே அதனை நிறைவேற்றும் வகையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்த கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலைய வணிக வளாகத்தின் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சதிஷ், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் மல்டிபிளெக்ஸ் திரையரங்கை திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து திரைப்படங்களின் முன்னோட்டங்கள் திரையிடபட்டன.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது கரகாட்ட கலைஞரிடம் இருந்து கரகத்தை பெற்று நடிகர் சதிஷ் நடனமாடினார். சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள 5 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் 1155 பேர் அமர்ந்து திரைப்படங்களை கண்டுகளிக்கலாம் விமானத்திற்காக காத்திருந்து சலிப்படையும் பயணிகளுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சமாக இந்த திரையரங்கம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories: