கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பட்டியலின ஆணைய உத்தரவை எதிர்த்து கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என அறநிலையத்துறைக்கு அளித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

பட்டியலின ஆணையம் அதிகார வரம்பை மீறி எப்படி உத்தரவை பிறப்பித்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாதேபள்ளி சக்கியம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த சீனிவாசன், தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த தேசிய பட்டியலின ஆணையம், கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

Related Stories: